நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டார் செந்தோசா வெள்ள செந்தோசா என கிண்டல் செய்ய வேண்டாம்; 66 மில்லியன் ரிங்கிட்டில் வெள்ள தடுப்பு திட்டங்கள் விரைவில் தொடங்கவுள்ளது: குணராஜ்

செந்தோசா:

பண்டார் செந்தோசா வெள்ள செந்தோசா என கிண்டல் செய்ய வேண்டாம். 66 மில்லியன் ரிங்கிட்டில் வெள்ள தடுப்பு திட்டங்கள் விரைவில் தொடங்கவுள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான் சுற்றுவட்டாரத்தில் கடுமையான மழை பெய்தது.

இதனால் செந்தோசாவை தவிர்த்து சுபாங்,ஷாஆலம், பண்டமாரன், பண்டார் போத்தானிக் உட்பட பல இடங்களில் வெள்ளப் பிரச்சினை ஏற்பட்டது.

செந்தோசாவில் சில வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பல சாலைகளை தண்ணீர் தேங்கி நின்றது.

ஆனால் இந்த வெள்ளம் கடந்த காலங்களை போல் இல்லை என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுவேன்.

மேலும் கடுமையாக மழை, ஆற்றில் உள்ள குப்பைகள், ஒரு இடத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து தண்ணீர் ஓடுவதற்கு தடை ஏற்பட்டது தான் இந்த வெள்ளத்திற்காக முக்கிய காரணமாகும்.

இநசெய்கின்றன வெள்ளப் பிரச்சினை குறித்து ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக தாமான் செந்தோசா தற்போது பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பண்டார் செந்தோசா என்கிறார்கள். ஆனால் வெள்ள செந்தோசாவாக தான் உள்ளது என கேலி செய்கின்றனர்.

இப்படி கேலி செய்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்று பண்டார் செந்தோசா என்று அறிவித்ததும் நாளை எல்லாம் மாறிவிடாது.

கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர்  பண்டார் செந்தோசா வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண 66 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளார்.

இத்திட்டத்திற்கு மாநில அரசும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. விரைவில் அதற்கான டெண்டர்கள் வெளியாக உள்ளது.

இப்பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் செந்தோசா வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நான் நம்புகிறேன்.

அதே வேளையில் பண்டார் செந்தோசாவில் பல மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும். ஆக பண்டார் செந்தோசா மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

மேலும் பண்டார் செந்தோசா மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக சரியான தகவல்கள் வழங்க வேண்டும்.

பொய்யான தகவல்களை வழங்கி மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று குணராஜ் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset