
செய்திகள் மலேசியா
லம்போர்கினி அவென்டடோர் கார் பறிமுதல் செய்யவில்லை; உரிமம் இல்லாத ஓட்டுநருக்கு மட்டுமே சமன்
கோலாலம்பூர்:
28 வயதான சீன இளைஞர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் சென்ற லம்போர்கினி அவென்டடோர் கார் பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூட்டரசுப் பிரதேசத்தின் சாலைப் போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
நேற்று ஜாலான் பங்சாரில் நோன்பு பெருநாள் கொண்டாடத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது உரிமம் இல்லாமல் லம்போர்கினி அவென்டடோர் காரை ஓட்டிய ஓட்டுநருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக, சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட 27 வாகனங்களில் 28 வயது நபர் ஓட்டிச் சென்ற காரும் அடங்கும் என்று கூட்டரசுப் பிரதேசத்தின் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குனர் ஹமிடி அடாம் கூறியதாகக் கூறப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm