
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநிலம் இவ்வாண்டு 14.7 மில்லியன் ரிங்கிட்டை பேரிடர் உதவி நிதியாக பெற்றது: நட்மா
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநிலம் இவ்வாண்டும் 14.7 மில்லியன் ரிங்கிட்டை பேரிடர் உதவி நிதியாக நட்மாவிடம் இருந்து பெற்றது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நாட்மா) இயக்குநர் கைருல் ஷாஹ்ரில் இட்ரஸ் இதனை தெரிவித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதும், பேரிடர் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு 10,000 ரிங்கிட் இறப்பு பண உதவியும் இதில் அடங்கும்.
கடந்த வாரம் சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் இந்த உதவி வழங்கப்பட்டது.
மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவாக பெட்டாலிங் மாவட்டம், நில அலுவலகம், சமூக நலத் துறையில் பதிவு செய்யப்பட்ட பேரிடர் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் உதவிகளை விநியோகிக்கும்.
இந்தப் பேரழிவால் முற்றிலுமாக அழிந்த ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் மொத்தம் 10,000 ரிங்கிட் ரொக்க உதவி கிடைத்தது. அதாவது மத்திய அரசிடமிருந்து 5,000 ரிங்கிட், பெட்ரோனாஸ் நிறுவனத்திடம் இருந்து 5,000 ரிங்கிட்டும் ஆகும்.
பகுதியளவு சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு 5,000 ரிங்கிட் பங்களிப்பு வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm