
செய்திகள் மலேசியா
ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிடை பறித்த குற்றச்சாட்டை நான்கு நண்பர்கள் மறுத்தனர்
ஜார்ஜ்டவுன்:
ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிடை பறித்த குற்றச்சாட்டை நான்கு நண்பர்கள் மீது இன்று ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தனர்.
வேலையில்லாத ஒருவர், ஒரு மாணவர் உட்பட நான்கு நண்பர்கள் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது,
அதே வேளையில் அவர்களில் இருவர் கடந்த மாதம் ஒரு போலீஸ் அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து போலி துப்பாக்கியை வைத்திருந்ததாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
பி. வீரன் 36, எஸ். ரோஹன் ராஜ் 22, எல். யுவராஜன் 20, எஸ். சிவா 22 ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் முகமது அஸ்லான் பாஸ்ரி மற்றும் மாஜிஸ்திரேட் நத்ரதுன் நைம் முகமது சைதி ஆகியோர் முன் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் வாசிக்கப்பட்டது,
இதனைத் தொடர்ந்து தாங்கள் குற்றமற்றவர் என கூறி அவர்கள் விசாரணை கோரியுள்ளனர்.
55 வயதான எஸ். பிரபாகரனுக்கு பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் வேண்டுமென்றே மிரட்டி பணம் பறித்தாக கூறப்படுகிறது.
குறிப்பாக போலிஸ் போல் பணத்தை அவர்களிடம் ஒப்படைக்கும் வரை கைது செய்யப்படும் அபாயத்தை ஏற்படுத்தயதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm