நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடைநிலப் பள்ளி மாணவிகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றப்பட்டு சமூக ஊடகங்களில் விற்பனை

கூலாய்:

இடைநிலப் பள்ளி மாணவிகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றப்பட்டு சமூக ஊடகங்களில் விற்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜொகூர், கூலாயில் உள்ள ஃபூன் யூ இடைநிலைப் பள்ளி மாணவிகளின் படங்கள் ஆபாசமாக மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு பெண் மாணவி சமூக ஊடகங்களில் தனது ஆண் வகுப்புத் தோழர் ஒருவர் புகைப்பட எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னைப் பற்றிய ஆபாசமான படங்களை உருவாக்கி, அந்தப் படங்களை அரட்டைக் குழுவில் விற்றதாகக் கூறினார்.

முன்னதாக  கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கின் சிறப்பு உதவியாளர் யோங் ஹுய் யி,

சமீபத்திய நாட்களில் இது தொடர்பில் பல பாதிக்கப்பட்டவர்களுடன் போலிஸ் புகார்கள் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் பள்ளியின் முன்னாள் மாணவி என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 12 சனிக்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset