நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதானது: வைரலாகும் படங்கள் 

ராமேஸ்வரம்:

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.

ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்தப் புதிய ரயில் பாலம் கப்பல் செல்கையில் செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு தூக்கப்படுகிறது.

இந்த நிலையில், செங்குத்து பாலத்தை இறக்கும்போது பழுது ஏற்பட்டு பாலம் கோணலாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

New Pamban Rly Bridge completed in five years' time, poised for  inauguration by PM soon

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அதிகாரிகள் பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே பாலம் பழுதடைந்ததால் பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset