நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோல தாஹான் மலையேற்றத்தின் போது நெதர்லாந்து பெண் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

ஜெராண்டுட்:

கோல தாஹான் மலையேற்றத்தின் போது நெதர்லாந்து பெண் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

ஜெராண்டுட் மாவட்ட  போலிஸ் தலைவர் சுக்ரி முஹம்மது இதனை கூறினார்.

நேற்று மாலை இங்கு அருகிலுள்ள கோல தாஹானில் உள்ள லுவாஸ் குகைக்குச் செல்லும் நடைபாதையில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது 33 வயதுடைய அப்பெண் உயிரிழந்தார்.

பொம்மிலியன் கேத்தரினா மரியா மெய்ஜ்ஸ் 16 சுற்றுலாப் பயணிகளுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். மேலும் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளால் வழிநடத்தப்பட்டார்.

ஒரு மணி நேரம் படகில் சென்று 2 மணி நேரம் நடந்து, கோல தாஹான் தேசிய பூங்காவின் லுவாஸ் குகைக்கு சென்று கொண்டிருந்த அவர் மரணமடைந்துள்ளார்.

 காலை 9 மணிக்கு இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது. கோலா டெம்பலிங் காவல் நிலையத் தலைவர், மூன்று அதிகாரிகள் காலை 11.30 மணிக்கு படகு மூலம் லுவாஸ் குகையில் உள்ள இடத்திற்கு விரைந்தனர்.

பாதிக்கப்பட்டவர் பலமுறை விழுந்து மயக்கமடைந்ததாகவும், பின்னர் தொடர்ந்து நடக்க முடியாமல் போனதாக விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset