நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்திய இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

இந்திய இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலான விளையாட்டுப் போட்டிகள் பரவலாக நடத்தப்பட வேண்டும்.

பத்து நாடாலுமன்ற உறுப்பினர் பி. பிராபகரன் இதனை கூறினார்.

இந்தியர் போவ்லிங் கிளப்பின் ஏற்பாட்டில் போவ்லிங் போட்டி இரண்டு  நாட்களுக்கு தலைநகரில் நடைபெறுகிறது.

இப்போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருக்கும் ரகு, டேவிட் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

இந்திய இளைஞர்களை ஒன்றிணைப்பதுடன் அவர்களது நேரத்தை நல்ல வழியில் பயன்படுத்துவதற்கு இதுபோன்ற போட்டிகள் மிகவும் முக்கியமானதாகும்.

அவ்வகையில் இதுபோன்ற போட்டிகள் பரவலாக நடத்தப்பட வேண்டும்.

இப்போட்டிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன் என்று பிரபாகரன் கூறினார்.

முன்னதாக இந்த போவ்லிங் போட்டியில் நாடு தழுவிய நிலையில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இப் போட்டி வெற்றிகரமாக நடைபெற ஆதரவு தந்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி என்று ரகு, டேவிட் ஆகியோர் கூறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset