நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பூடாகன் கராத்தேவில் இந்திய இளைஞர்கள் முனைப்பு காட்ட வேண்டும்: மாஸ்டர் ஜேசன் குமார்

ஈப்போ: 

பேராக் மாநில பூடாகன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறையும் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதாக மாஸ்டர் ஜேசன் குமார் வில்லியம் கூறினார்.

மலேசியாவில் பூடாகன் கராத்தேவை உருவாக்கிய எல்.தி.சீயுவின் புதல்வர் ரிச்சட் எல்.தி. சீயுவ் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு தற்போதைய பயிற்சி பட்டறையை சிறப்பாக வழிநடத்தியதாக குறிப்பிட்டார்.

இந்த பூடாகன் கராத்தே பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்கள் கட்டொழுங்கு, மரியாதை, தூரநோக்கு சிந்தனை, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்ற பண்புநலன்களை கற்று தங்கள் வாழ்வாதாரத்தை முறையாக வழிநடத்தி செல்ல ஏதுவாக அமையும் என்று அவர் கருத்துரைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு முதலில் கல்வி முக்கியமாகும். அடுத்த கட்டமாக விளையாட்டுத்துறையும் அவசியமாகும். ஆகையால், இந்த பூடாகன் கராத்தோவில் மாணவர்கள் ஈடுபட அழைக்கப்படுகின்றனர்.

அத்துடன், இங்கு நமது தேகம் அடிபடாமல் எப்படி பராமரிக்க வேண்டும் என்று போதிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நம்நாட்டில் சுக்மாவில் இந்த பூடாகன் கராத்தே விளையாட்டும் இடம் பெற்று வருகிறது. இதில் அதிகமான இந்திய மாணவர்கள், இளைஞர்கள் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் கோடிக்காட்டினார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் விருந்தோம்பல் நிகழ்வுடன் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

சான்றிதழை கிராண்ட் மாஸ்டர் ரிச்சர் எழுதி சீயுவ் எடுத்து வழங்கினார். இந்நிகழ்வு ஈப்போ லிட்டல் மகாராஜ் கிச்சன் நிறுவனத்தார் ஆதரவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

- ஆர். பாலச்சந்தர

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset