
செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
ரியாத்:
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.
போர்த்துகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கிளப் அரங்கில் தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார்.
இவரது அணி, கிளப் அணிகளுக்கான பிபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க தகுதி பெறவில்லை.
முன்னதாக மெசெஸ்டர் யுனைடெட் (2008), ரியல்மாட்ரிட் (2014, 2016, 2017) அணிக்காக என 4 முறை கிளப் உலகக் கிண்ண போட்டியில் வென்றுள்ளார்.
இம்முறை மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
அல் நசர் அணியின் ஒப்பந்தம் இம்மாதம் முடிய உள்ளது. இதை இன்னும் புதுப்பிக்காமல் உள்ளார்.
இதனிடையே, கிளப் உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள், ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்க பிபா தயாராகி வருகிறது.
இதனால் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய இந்தர்மிலன், ரியல்மாட்ரிட், அல் ஹிலால் அணிகள் முயற்சி செய்து வருகின்றன.
தவிர லியோனல் மெஸ்சி விளையாடும் இந்தர்மியாமி அணியும், கிளப் உலகக் கிண்ண போட்டிக்கு மட்டும் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக செய்தி வெளியாகின.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 12:10 pm
உலக முக்குளிப்பு போட்டி: இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பண்டேலேலா ரினோங் தவறவிட்டார்
April 4, 2025, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
April 3, 2025, 10:21 pm
பூடாகன் கராத்தேவில் இந்திய இளைஞர்கள் முனைப்பு காட்ட வேண்டும்: மாஸ்டர் ஜேசன் குமார்
April 3, 2025, 11:14 am
கோபா டெல் ரெய் கிண்ண இறுதியாட்டத்தில் பார்சிலோனா
April 3, 2025, 11:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 3, 2025, 7:52 am
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி
April 2, 2025, 6:42 pm
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் செயலாளர் சந்தனராஜூ காலமானார்
April 2, 2025, 10:28 am
கோபா டெல் ரெய் கிண்ண இறுதியாட்டத்தில் ரியல்மாட்ரிட்
April 2, 2025, 9:43 am