நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக முக்குளிப்பு போட்டி: இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பண்டேலேலா ரினோங் தவறவிட்டார்

கோலாலம்பூர்: 

மெக்சிகோவின் குவாடலாஜாராவில் நேற்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான உலக முக்குளிப்பு போட்டியின் இறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தேசிய முக்குளிப்பு வீராங்கனை பண்டேலேலா ரினோங் தவறவிட்டார்.

தகுதி சுற்றில் முதல் 12 இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களே இறுதி சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். 

இந்நிலையில், முக்குளிப்பு போட்டியின் 10 மீட்டர் தனி நபர் பிரிவில் களமிறங்கிய பண்டேலேலா தகுதிச் சுற்றில் 13-ஆவது இடத்தைப் பிடித்த நிலையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இயலாமல் போனது. 

267.85 புள்ளிகளைப் பெற்றுப் பண்டேலேலா 13-ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதற்கிடையில், தேசிய முக்குளிப்பு வீரர் சனிக்கிழமை ஆண்களுக்கான 10 மீட்டர்  தனிநபர் முக்குளிப்பு போட்டியிம்ன் தகுதிச் சுற்றில் போட்டியிடுகிறார்.

உலக முக்குளிப்பு போட்டி இவ்வாண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கனடாவின் விண்ட்சரில் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து மே 2 முதல் 4 வரை சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset