நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய மண்ணின் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சதுரங்கப் போட்டியில் களம் காணுகின்றனர்

மஞ்சோங்:

மஞ்சோங் மாவட்டத்திலுள்ள தேசியப்பள்ளி, சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான சதுரங்கம் போட்டி வரும் 10.8.2025 (ஞாயிற்றுக் கிழமை) காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரை ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இப் போட்டி 7, 8,10, 12 வயதிற்குட்பட்ட பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 10 வரை வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்.

இதுவரை சுமார் 210 மாணவர்கள் பங்கு பெறுவதாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் மஞ்சோங் மாவட்டத்தை தவிர்த்து இதர மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிறந்த வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருதும் வழங்கப்படவுள்ளது.

இப்போட்டி பற்றிய மேலும் தகவல்கள் பெற எண்ணுவோர் கீழ் குறிப்பிட்ட எண்ணுடன் தொடர்புக்கொள்ளவும்.( 016-5991424; 012-5822591).

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset