
செய்திகள் விளையாட்டு
நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி; 52 அணிகள் பங்கேற்றுள்ளன: பழனி
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி 53 அணிகள் பங்கேற்றுள்ளன.
நெகிரி செம்பிலான் மீபா துணைத் தலைவர் பழனி சண்முகம் இதனை கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடயே கால்பந்து விளையாட்டை ஊக்குவக்க வேண்டும்.
குறிப்பாக கால்பந்து விளையாட்டில் அதிகமான இந்தியர்கள் மாநில, தேசிய அணிகளுக்காக விளையாட வேண்டும்.
இதுவே மீபா எனப்படும் மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின் முதன்மை இலக்காக உள்ளது.
இதன் அடிப்படையில தான் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியை மீபா நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளுக்கான போட்டி இன்று நடைபெறுகிறது.
ஆண்கள் பிரிவில் 32 அணிகளும் பெண்கள் பிரிவில் 16 அணிகளும் இப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன.
குறிப்பாக மாநிலத்தில் உள்ள 27 தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளன.
இதுவே இப்போட்டிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
அதே வேளையில் ஐஆர்சி கிளப்புடன் இணைந்து மீபா நான்கவது ஆண்டாக இப்போட்டியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது இந்திய மாணவர்களை கால்பந்து துறையில் சாதனையாளர்களாக உருவாக்க மீபா தயாராக உள்ளது. ஆனால் அதற்கு அனவரின் ஆதரவு குறிப்பாக நிதி உதவிகள் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக இக் கால்பந்து போட்டியை தொழிலதிபர் டத்தோ பத்மநாதன் என்ற சுரேஷ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பித்தார்.
மேலும் இப் போட்டியின் வெற்றிக்காக அவர் 10ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2025, 9:54 am
கிளப்களுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 10, 2025, 9:30 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 9, 2025, 10:33 am
பலோன் டி ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை: ரொனால்டோ
August 9, 2025, 9:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி வெற்றி
August 9, 2025, 8:59 am
சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?
August 8, 2025, 12:24 pm
சுக்மா சிலம்பம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்: டத்தோ முருகையா
August 8, 2025, 9:00 am
மெஸ்ஸிக்கு நிகரான சம்பளம் லாஸ் ஏஞ்சலஸ் அணியின் இணைந்தார் தென் கொரிய வீரர்
August 8, 2025, 8:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: அல் நசர் அணியினர் வெற்றி
August 7, 2025, 4:43 pm