
செய்திகள் விளையாட்டு
சுக்மா சிலம்பம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்: டத்தோ முருகையா
கோலாலம்பூர்:
சுக்மா சிலம்பம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா வலியுறுத்தினார்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம் 2026 சுக்மா போட்டியில் இடம் பெற வேண்டும்.
சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் நீக்கப்பட்டது பெரும் அநீதியாகும். இது இந்திய விளையாட்டாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற செய்யும் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக தலையிட வேண்டும் என்று சுக்மாவில் சிலம்பத்தை அதிகாரப்பூர்வ விளையாட்டாக சேர்க்க வேண்டும்.
ஆனால் இந்த போட்டியை நீக்கிய செயல் சிலம்ப விளையாட்டாளர் கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறித்து நானும் கவலை அடைகிறேன்.
சிலம்பம் என்பது மலேசியா உட்பட இந்த பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பாரம்பரிய தமிழர்களின் தற்காப்புக் கலையாகும்.
மேலும் இது நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற பல திறமையான சிலம்ப விளையாட்டு வீரர்கள் மலேசியாவில் உள்ளனர். சிலம்பம் பல ஆண்டுக்காலமாக மலேசியாவிற்கு பெருமை சேர்க்கும் விளையாட்டாக உள்ளது.
சிலம்பத்தை அதிகாரப்பூர்வ விளையாட்டாக மீண்டும் நிலைநிறுத்த, மலேசிய ஒலிம்பிக் கவுன்சில், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2025, 9:54 am
கிளப்களுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 10, 2025, 9:30 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 9, 2025, 10:33 am
பலோன் டி ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை: ரொனால்டோ
August 9, 2025, 9:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி வெற்றி
August 9, 2025, 8:59 am
சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?
August 8, 2025, 12:20 pm
நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி; 52 அணிகள் பங்கேற்றுள்ளன: பழனி
August 8, 2025, 9:00 am
மெஸ்ஸிக்கு நிகரான சம்பளம் லாஸ் ஏஞ்சலஸ் அணியின் இணைந்தார் தென் கொரிய வீரர்
August 8, 2025, 8:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: அல் நசர் அணியினர் வெற்றி
August 7, 2025, 4:43 pm