நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸிக்கு நிகரான சம்பளம் லாஸ் ஏஞ்சலஸ் அணியின் இணைந்தார் தென் கொரிய வீரர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடரான எம்எல்எஸ் தொடரில் தென் கொரிய வீரர் சோன் இயோங் மின் லாஸ் ஏஞ்சலீஸ் அணியில் இணைந்தார்.

தென்கொரியாவைச் சேர்ந்த அவர் தன்னுடைய 23ஆவது வயதில் வடக்கு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். 

பத்தாண்டுகள் பிரிமியர் லீக்கில் விளையாடியுள்ளார். இதில் டோட்டன்ஹாம் அணிக்காக 454 போட்டிகளில் 173 கோல்கள் அடித்துள்ளார்.

ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டோட்டன்ஹாம்  அணி சமீபத்தில் கைப்பற்றியது. 

40 ஆண்டுகளில் டோட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும்.

தற்போது அவர் அமெரிக்காவில் எம்எல்எஸ் தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

20 மில்லியன் டாலர் கொடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் அணி இவரை 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

எம்எல்எஸ் வரலாற்றில் அதிகமாக மெஸ்ஸி 20.4 மில்லியன் டாலர் ஊதியம் பெருகிறார். 

தற்போது சோன் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் கிட்டதட்ட அவருக்கு நிகராக ஒப்பந்தமாகியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset