
செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்திலிருந்து காயத்தினால் நெய்மர் விலகல்
பிரேசிலியா:
உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியுடனான போட்டியிலிருந்து நெய்மர் விலகியுள்ளார்.
சமீபத்தில் 17 மாதங்களுக்குப் பின் முன்னாள் கேப்டன் நெய்மர் பிரேசில் அணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகின் இளவரசன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
மெஸ்ஸி, ரொனால்டாவுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர் நெய்மர்.
சவூதி புரோ லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சன்தோஷ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் சன்தோஷ் போட்டியில் நெய்மர் விளையாடவில்லை. இடது தொடையில் காயமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தென அமெரிக்கா உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் 5ஆவது இடத்தில் உள்ள பிரேசில் கொலம்பியாவை மார்ச் 20ஆம் தேதி சந்திக்கிறது. அடுத்த 5 நாள்களில் அர்ஜெண்டினாவை சந்திக்க இருக்கிறது.
இவ்வாட்டங்களில் நெய்மார் விளையாட மாட்டார்.
ரியல்மாட்ரிட் அணியில் விளையாடும் என்ட்ரிக் நெய்மருக்கு பதிலாக விளையாடவுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am