நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில்  மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியுடன் சமநிலை கண்டனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் கோலை புருனோ பெனாண்டஸ் அடித்த வேளையில் அர்சென்ல் அணியின் கோலை டெக்லன் ரைஸ் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியுடன் சமநிலை கண்டனர்.

செல்சி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset