
செய்திகள் விளையாட்டு
12 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை வென்று இந்தியா சாதனை
துபாய்:
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தது.
நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக ஷ்ரேயஸ் - அக்சர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.இதையடுத்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் அக்சர் அவுட்டானார்.
இறுதியில் கே.எல்.ராகுல் - ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் 49 ஓவர் முடிவில் 254 ரன்கள் அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா சாதனை படைத்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 8:41 am
ஐரோப்பிய சாம்பியன்: லீக் லிவர்பூல் ஏமாற்றம்
March 11, 2025, 9:20 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
March 11, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அல் நசர்
March 10, 2025, 10:30 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 10, 2025, 10:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 9, 2025, 10:51 am
இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ்: ஸ்வியாடெக், ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி
March 9, 2025, 9:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
March 8, 2025, 11:40 am