
செய்திகள் விளையாட்டு
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
கொழும்பு:
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 101 ஓட்டங்களையும், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதன்படி, 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வௌ்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 10:28 am
கோபா டெல் ரெய் கிண்ண இறுதியாட்டத்தில் ரியல்மாட்ரிட்
April 2, 2025, 9:43 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 29, 2025, 1:12 pm
சென்னை அணி ரசிகர்களைக் கவரத் தோனியைத் தவிர்த்து வேறு எந்த வீரரையும் உருவாக்கவில்லை...
March 29, 2025, 2:15 am
ஹேசில்வுட் அபாரப் பந்துவீச்சு: 17 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணில்...
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணிய...
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm