நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் கடன்பற்று அட்டை மோசடி: $85,000 இழப்பு

சிங்கப்பூர்: 

கடன்பற்று அட்டை மோசடியில் ஈடுபட்டதாய்ச் சந்தேகிக்கப்படும் 49 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் கடந்த மாதம் (ஜனவரி) 23ஆம் தேதி நடந்தது.

சில உள்ளூர் விற்பனையாளர்கள் தங்களது நிறுவனங்களின் பெயரில் அனுமதியற்ற பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதைத் தத்தம் வங்கிகள் மூலம் அறிந்தனர்.

அவர்கள் அதைப் பற்றி காவல்துறையிடம் புகாரளித்தனர்.

விசாரணையின் மூலம் சந்தேக நபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (10 பிப்ரவரி) அவர் கைதாகினார்.

அந்த ஆடவர் திருடப்பட்ட கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தி சுமார் 85,000 வெள்ளி மதிப்புள்ள ஆடம்பரப் பொருள்களை வாங்கியது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தின் தொடர்பில் கடன்பற்று அட்டைகள், 3 கைத்தொலைபேசிகள், ஆடம்பரக் கைக்கடிகாரம்,
RFID கருவி ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்த நபர் இதுபோன்ற மற்ற மோசடிச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது.

அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம்: மீடியா கார்ப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset