![image](https://imgs.nambikkai.com.my/kids-6c10e.jpg)
செய்திகள் உலகம்
இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி கிடையாது: சவூதி அரசு அறிவிப்பு
ஜித்தா:
முஸ்லிம்களின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஹஜ் பயணம் மேற்கொள்வதாகவும், தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொள் வேண்டும் என்பதால், உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கும் மதீனாவிற்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு நாட்டுக்கும் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு ஆண்டுதோறும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் மக்காவில் ஹஜ் பயணத்திற்கு வரும் பக்தர்களின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 2025ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது, யாத்ரீகர்களுடன் குழந்தைகள் செல்ல அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போது இதுவரை புனித யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும்.
சவூதியில் வாழும் மக்களுக்கு நுசுக் தளம் வழியாக விண்ணப்பிக்கும் பணி தொடங்கபட்டுவிட்டது.
புதிய விதிமுறைகளை அறிந்துகொண்டு, ஒருவர் தான் மற்றும் தன்னுடர் வருபவர்களுக்கான பதிவுகளை செய்ய வேண்டும்.
உள்நாட்டு யாத்ரீகர்கள் கட்டணத்தை மூன்று தவணைகளாக செலுத்தலாம். முன்பதிவு செய்த 72 மணி நேரத்துக்குள் 20 சதவீத வைப்புத் தொகையும், ரமலான் மாதம் மற்றும் ஷவ்வால் மாதத்தில் இரண்டு சமமான தொகையை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள 1,75,025 இந்திய யாத்ரிகா்களுக்கு சவூதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அந்நாட்டு ஹஜ் துறைக்கான அமைச்சா் தெளஃபீக் பின் ஃபாசான் அல் ராபியாவுடன் மத்திய சிறுப்பான்மை விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஜனவரி மாதம் மேற்கொண்டார்.
மலேசியாவிலிருந்து இந்த ஆண்டு 31,600 புனிதப் பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2025, 11:39 am
சிங்கப்பூரில் கடன்பற்று அட்டை மோசடி: $85,000 இழப்பு
February 11, 2025, 8:01 pm
கவுதமாலாவில் பேருந்து விபத்தில் 51 பேர் பலி
February 11, 2025, 12:35 pm
ஒரு குரங்கின் சேட்டையால் இலங்கை முழுவதும் மின் தடை.
February 11, 2025, 12:10 pm
அமெரிக்க திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்கள் காசாவுக்குத் திரும்ப உரிமை இல்லை: டிரம்ப்
February 10, 2025, 4:34 pm
GovPay மூலம் மக்களின் அலைச்சலும் அழுத்தமும் குறையும்: இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க
February 10, 2025, 4:08 pm
இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: பிரதமர்
February 10, 2025, 11:51 am