நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒரு குரங்கின் சேட்டையால் இலங்கை முழுவதும் மின் தடை.

கொழும்பு: 

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

இலங்கைத் தலைநகர் கொழும்பின் (Colombo) மின்சக்தி நிலையத்தில் ஒரு குரங்கு செய்த சேட்டையால் வந்த வினைதான் நாடு முழுவதும் மின்தடை.

நேற்று ,முதல் அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.

அதனால் 30 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருந்த வெப்பநிலையில் மக்கள் அவதிப்பட்டனர்.

குரங்கு ஒன்று மின்சக்தி இயந்திரத்தில் ஏறியதால் மின் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

22 மில்லியன் பேர் வாழும் இலங்கையில் மின்சாரத்தை மீண்டும் செயல்படுத்த பொறியாளர்கள் அரும்பாடுபட்டனர்.

மருத்துவமனைகள், நீர்ச்சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற முக்கிய இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் சில மணி நேரத்தில் திரும்பியது.

ஆனால் சில பகுதிகளில் இரவிலும் மின்சாரம் இல்லாமல் இருந்தது.

இதற்கிடையே, 900 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, நாடு முழுவதும் திங்கள்கிழமையும் (பிப். 10) செவ்வாய்க்கிழமையும் (பிப். 11) தலா 90 நிமிஷங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று இலங்கை மின் வாரம் அறிவித்துள்ளது. 

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset