நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை 

கொழும்பு: 

இலங்கை நாட்டினை ஊழலற்ற நாடாக மாற்ற முற்படுவேன் என்று இலங்கை நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரைத்துள்ளார் 

இன்று இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அநுர குமார திசநாயக்க ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டார் 

உலக அரங்கில் இலங்கையின் பெயர் மேலோங்க செய்ய வேண்டும், அதற்கு ஊழல் ஒரு தடையாக உள்ளது. அதனை எதிர்ப்பது நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அவர் உரையாற்றினார் 

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கை அரசாங்கத்தில் கடும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக்க புதிய அதிபராக பொறுப்பேற்றார். 

கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவை அநுர குமார திசநாயக்க அதிக வாக்குகளில் வீழ்த்தினார் குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset