நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்

வாஷிங்டன்:

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவுள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பொன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

பாலஸ்தீனியர்கள் காசாவிற்கு வெளியே மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவை அமெரிக்கா பொறுப்பேற்று அங்குள்ள வெடிபொருட்கள் போன்றவற்றை அகற்றுவதுடன் அதனை அபிவிருத்தி செய்யும் என தெரிவித்துள்ள டிரம்ப் காசா அபிவிருத்தி செய்யப்படும் காலப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் வேறு பகுதிகளில் மீள் குடியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த யோசனை ஆராயப்படுவதற்கு தகுதியான ஒன்று என  குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset