நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

உதயநிதிக்கு எதிரான சனாதன தர்ம வழக்கு தள்ளுபடி

புது டெல்லி: 

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான சனாதன தர்மம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் அவர் மீறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது, சனாதனம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 3 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை. எனவே இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்போகிறோம் என்றனர்.

அதையடுத்து இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையேற்ற நீதிபதிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset