செய்திகள் தமிழ் தொடர்புகள்
திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது: ஸ்டாலின்
விழுப்புரம்:
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்று விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப்போராளிகளை போற்றும் வகையில், விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை இன்று (ஜன.28) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு அமைந்துள்ளது. 2019 விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ.கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.
21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது.
வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்துக்கான தேவைகளை கண்டறியப்பட்டது.
அதன்படி நந்தன்கால்வாய் ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ.4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ.2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன். என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு.
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2025, 1:22 pm
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
February 2, 2025, 7:33 pm
1967, 1977-ஐ போல் 2026-ல் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை உருவாக்குவோம்’: விஜய்
January 31, 2025, 12:59 pm
தெருவில் திரியும் நாய்களுக்கும், மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு
January 29, 2025, 10:49 pm
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்ம வழக்கு தள்ளுபடி
January 27, 2025, 12:50 pm
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்யுங்கள்: சீமான் அறைகூவல்
January 27, 2025, 12:43 pm
குடியரசு தின விழாவில் பதக்கம், விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
January 24, 2025, 8:32 pm
நாடாளுமன்ற வக்ஃபு கூட்டுக் குழுவின் 10 எம்பிகள் இடைநீக்கம் ஒரு ஜனநாயக படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்
January 24, 2025, 6:08 pm
ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான் மக்களுக்கு வெளிச்சம்: சீமான்
January 24, 2025, 2:46 pm