
செய்திகள் தமிழ் தொடர்புகள்
லேசர் ஒளியால் தாமதமாகத் தரையிறங்கிய சிங்கப்பூர் - திருச்சி விமானம்
திருச்சி:
சிங்கப்பூரிலிருந்து திருச்சி சென்ற விமானத்தின்மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால் அவ்விமானம் வானிலேயே அரைமணி நேரம் வட்டமடிக்க நேரிட்டது.
சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய ஸ்கூட் விமானம் ஒன்று திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதன்மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த விமானி, அதுகுறித்து விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, வானிலேயே வட்டமடித்தபடி இருந்தார்.
பின்னர், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையின் ஆலோசனையின்படி, 37 நிமிடம் தாமதமாக அவ்விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதேபோன்று மலேசியாவிலிருந்தும் துபாயிலிருந்தும் வந்த விமானங்கள் மீதும் லேசர் ஒளி அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதன் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:39 pm
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm