செய்திகள் உலகம்
HBO படம் பார்ப்பதற்கு 14,000 கணக்குகளை ஊடுருவிய சிங்கப்பூர் ஆடவர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் HBO தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாகப் பார்ப்பதற்காக ஒருவர் 14,000க்கும் மேற்பட்ட meconnect கணக்குகளை ஊடுருவியிருக்கிறார்.
அந்த ஆடவருக்கு 15 மாத நன்னடத்தை உத்தரவு விதிக்கப்பட்டது.
அவர் 60 மணி நேரச் சமூகச் சேவையும் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
24 வயது சுஃபியான் இஸ்கண்டார் (Sufian Iskandar) எனும் அந்த நபர் கசிந்த மின்னஞ்சல்களையும் கடவுச்சொற்களையும் பயன்படுத்தி ஊடுருவி இருக்கிறார்.
சம்பவம் 2023ஆம் ஆண்டு இறுதியில் நடந்தது.
ஜனவரி 22ஆம், 23ஆம் தேதிகளில் meconnect கணக்குகளுக்குள் நுழைய 10 மில்லியனுக்கும் அதிகமான முறை முயற்சி செய்யப்பட்டுள்ளது.
மீடியாகார்ப் அதை ஜனவரி 25ஆம் தேதி கவனித்தது.
மீண்டும் பிப்ரவரி 27ஆம், 28ஆம் தேதிகளில் (2023) 520,000க்கும் அதிகமான முறை meconnect கணக்குகளுக்குள் நுழைய முயற்சிக்கப்பட்டது.
அவற்றில் 4 முயற்சிகளில் சுஃபியான் வெற்றி கண்டார்.
காவல்துறை விசாரணைக்குப் பின் மார்ச் 9ஆம் தேதி அவர் கைதானார்.
மீடியாகார்ப் meconnect கணக்குகளின் தரவுகளும் கட்டணம் குறித்த தரவுகளும் அதன் தளத்திலிருந்து ஊடுருவப்படவில்லை என்று உறுதிப்படுத்தியது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 3:43 pm
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
February 4, 2025, 12:31 pm