செய்திகள் உலகம்
இலங்கையில் இன்றும் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை
கொழும்பு:
இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும். சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
- நிஹார்த ய்யூப்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 3:43 pm
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
February 4, 2025, 12:31 pm