நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

என்னோட கள அரசியல் பயணம் பரந்தூரில் தொடங்குகிறது: விஜய்

பரந்தூர்:

என்னோட கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.

பரந்தூர் விவசாயிகள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

சென்னையின் 2ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. 

இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 

ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால், அந்த கிராமத்தை மையமாக வைத்து 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். 

இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தார்.

மேலும் விவசாயிகள் முன்னிலையில் பேசிய விஜய்,

கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேல் உங்கள் மண்ணுக்காக போராடுகிறீர்கள்.

உடனே உங்களை எல்லாம் பார்க்கணும் தோணுச்சு. உங்க கூட பேசிய ஆகணும்னு தோணுச்சு. 
உங்க எல்லார் கூடயும் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன் என உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு.

எனது கள அரசியல் பயணம் பரந்தூரில் இருந்து தொடங்குகிறது. 

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டையும் ஆளும் அரசு எடுக்கிறது.

உங்கள் நாடகத்தை பார்த்துக்கொண்டு பொதுமக்கள் இனியும் அமைதியாக இருக்கமாட்டார்கள்.

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த இடத்தில் வரக்கூடாதுஎன கூறுகிறேன்.

விமான நிலைய திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். 

வளர்ச்சி முக்கியம்தான், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீர்கள் என்று விஜய் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset