நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானம் புறப்படுவதற்கு முன்னர் மது அருந்தியதாகச் சந்தேகிக்கப்படும் விமானி கைது

ஜார்ஜியா:

விமானம் புறப்படுவதற்கு முன்னர் மது அருந்தியதாகச் சந்தேகிக்கப்படும் சௌத்வேஸ்ட் விமான நிறுவனத்தின் விமானி  கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயது டேவிட், ஜார்ஜியா விமான நிலையத்தில் கைதானார்.

சம்பந்தப்பட்ட விமானம் சவன்னாவிலிருந்து சிக்காகோ நகருக்குப் புறப்படவிருந்ததாக இருந்தது.

டேவிட் மது அருந்தியதற்கான அறிகுறிகள் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.

மது அருந்தியதை உறுதிசெய்வதற்கான ரத்த பரிசோதனையை எடுக்க அவர் மறுத்துள்ளார்.

சம்பவத்தின் தொடர்பில் டேவிட் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அவ்விமான நிறுவனம் கூறியது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்பட்ட தடங்கலுக்கு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset