நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை: 

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. 

இதை முன்னிட்டு வரும் 20, 22, 24 (ஒத்திகை நாட்கள்), 26ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 

இந்நாட்களில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
 
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் பசுமை வழி சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம், திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம், வெங்கடேச அக்ரஹாரம் தெரு, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வே சென்றடையலாம்.

அதேபோல் அடையாறில் இருந்து வரும் பிற வாகனங்கள், காந்தி சாலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டு ராயப்பேட்டை 1-பாயின்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வேக்கு சென்றடையலாம். 

மயிலாப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயின்ட்டில் இடது அல்லது வலது புறமாகத் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset