செய்திகள் தமிழ் தொடர்புகள்
கடும் பனிமூட்டத்தினால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு: திருப்பி அனுப்பப்பட்ட 7 விமானங்கள்
சென்னை:
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நீண்ட நேரம் கடும் பனிமூட்டம் நிலவியதால், சென்னை விமானநிலையத்தில் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதில் 7 விமானங்கள் ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், 10க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு தாமதமானதால் ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சென்னையில் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் நீண்ட நேரம் கடும் பனிமூட்டம் நிலவியது. இதையடுத்து, சென்னை விமானநிலையப் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது.
இதனால் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், அங்கு ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்து தத்தளித்துவிட்டு, மீண்டும் பெங்களூருக்கும் திருப்பதிம் திருப்பி அனுப்பப்பட்டன.
குறிப்பாக, மும்பையில் இருந்து 157 பயணிகளுடன் இன்ற காலை 6.35 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பையில் இருந்து 149 பயணிகளுடன் காலை 7 மணியளவில் சென்னை வந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரில் இருந்து 180 பயணிகளுடன் காலை 7 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூரில் 164 பயணிகளுடன் காலை 7.15 மணியளவில் சென்னை வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் காலை 8 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தம் 12 விமானங்கள், சென்னை விமானநிலைய ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.
இதைத் தொடர்ந்து, அந்த 12 விமானங்களையும் சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பெங்களூர், திருப்பதி விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதுதவிர, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 21 விமானங்களின் புறப்பாடும் கடும் பனிமூட்டம் காரணமாக பலமணி நேரம் தாமதமாகி உள்ளன.
குறிப்பாக, சென்னையில் இருந்து பெங்களூர், ஐதராபாத், மும்பை, அந்தமான், திருச்சி, டெல்லி, கோலாலம்பூர் உள்பட 10 விமானங்களின் புறப்பாடு, கடும் பனிமூட்டம் காரணமாக பலமணி நேரம் தாமதமாகியுள்ளன. இதன் எண்ணிக்கை கடும் பனிமூட்டம் காரணமாக இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை விமானநிலையப் பகுதிகளில் தொடர் பனிமூட்டம் காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு சூரிய ஒளி வந்ததும் விமான சேவைகள் சகஜ நிலைக்கு திரும்பியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
