செய்திகள் தமிழ் தொடர்புகள்
ரூ. 9,000 கோடியில் டாடா மோட்டாா்ஸ் காா் தொழிற்சாலையை பனப்பாக்கத்தில் முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்
இராணிப்பேட்டை:
பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா்.
இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் துறை தொழிற்பூங்காவில் ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்க 28.09.2024 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில். முதல்வா் மு.க.ஸ்டாலின், டாடா தொழிற்சாலையை திறந்து வைத்து, உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை திங்கள்கிழமை (பிப். 9) காலை 11 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.
நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
