செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக, நாதக வேட்பாளர் உட்பட 55 பேரின் மனுக்கள் ஏற்பு
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி கடந்த 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், விடுமுறை நீங்கலாக 10, 13, 17-ம் தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நிறைவு நாளான 17-ம் தேதி மனுதாக்கல் செய்தனர்.
மொத்தமாக 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதையொட்டி, வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் குவிந்திருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ், பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 55 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மணீஷ் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
“செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணை”: நடிகர் விஜய்
November 27, 2025, 7:24 am
தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை: வானிலை மையம்
November 26, 2025, 9:24 pm
