செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: த வெ கழகத் தலைவர் விஜய்
சென்னை:
“தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், “பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026-இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று விஜய் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 8:42 pm
மாலை 5 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
April 23, 2026, 12:37 pm
ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு க ஸ்டாலின்
April 23, 2026, 12:32 pm
100% நம்பிக்கையோடு உள்ளேன்,”: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
April 23, 2026, 11:26 am
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்
April 23, 2026, 11:12 am
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
April 22, 2026, 10:42 pm
கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு குதிரையில் சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள்
April 22, 2026, 5:38 pm
