செய்திகள் தமிழ் தொடர்புகள்
சாலமன் பாப்பையா மனைவி காலமானார்
மதுரை:
மதுரையில் வயது முதிர்வு காரணமாக காலமான தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் உடலுக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ஜெயபாய் (86). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக இன்று காலை ஜெயபாய் காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சாலமன் பாப்பையாவுக்கும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த தமிழஞறிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என, ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலையில் அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடந்தது. தத்தனேரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது என, குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2025, 12:53 pm
கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
January 15, 2025, 12:17 pm
1,000 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது
January 14, 2025, 7:15 pm
களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
January 14, 2025, 1:01 am
தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: த வெ கழகத் தலைவர் விஜய்
January 12, 2025, 5:07 pm
“தமிழர்களின் திறமை, உழைப்பு தவிர்க்க முடியாதது”: அயலகத் தமிழர் மாட்டில் உதயநிதி உரை
January 12, 2025, 2:09 pm
செயற்கை நுண்ணறிவு துறை குறித்து மாணவர்கள் முழு விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 11, 2025, 12:59 pm