நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கலைஞர் காலத்தில் கையெழுத்திடப்பட்ட கோலாலம்பூர், சென்னை இரட்டை நகர் திட்டம் மீண்டும் உயிர் பெற வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை:

கலைஞர் கருணாநிதி காலத்தில் கையெழுத்திடப்பட்ட கோலாலம்பூர், சென்னை இரட்டை நகர் திட்டம் மீண்டும் உயிர் பெற வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை சென்னையில் நடைபெற்றுவரும் அயலகத் தமிழர் மாநாட்டில் வலியுறுத்தினார்.

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அயலகத் தமிழர் தினத்தை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிந்தனையில் உருவான இந்த நிகழ்வு உலகளாவிய நிலையில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது.

குறிப்பாக எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களின் நலனைக்காக தமிழ்நாடு, தமிழக அரசும் எப்போதும் உள்ளது என்று தமிழக முதல்வர் வழங்கிய உத்தரவாதம் மிகப்பெரிய வரவேற்புக்கு உட்பட்டதாகும்.

இதனை வாய் வழியாக பேசாமல் அதற்கு என்ன சிறப்பு அமைச்சுகளை நிறுவி அதன் வாயிலாக பல திட்டங்களை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வேளையில் மலேசியா தமிழர்களை தவிர்த்து உலகளாவிய நிலையில் வாழும் தமிழர்களின் சார்பில் எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி காலகட்டத்தில் கோலாலம்பூருக்கும் சென்னைக்கும் இடையிலான இரட்டை நகரத் திட்டம் ஒப்பந்தமானது.

அப்போதைய கோலாலம்பூர் மேயரும் தமிழகமே மேயரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவரின் ஆட்சிக்குப் பின் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து உருவானதாகும்.

தற்போது கலைஞருக்கு பின் முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என இந்த உறவு தொடர்ந்து வருகிறது.

அவ்வகையில் இந்த உறவை மேம்படுத்த இரட்டை நகரத் திட்டம் மிகவும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஆகவே முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற வேண்டும்.

இதுவே மலேசிய தமிழர்களின் கோரிக்கையாகும் என்று சென்னையில் நடைபெற்று வரும் அயலக தமிழர் தினத்தில் உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset