நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கம்யூனிஸ்ட் தொண்டரை கொலை செய்த வழக்கில் 9 ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு ஆயுள் சிறை

தலச்சேரி:

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

19 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிஜித் சங்கரனை பயங்கர ஆயுதங்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினர். இதில் ரிஜித் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

Nine RSS workers sentenced to life for 2005 murder of CPI(M) worker in  Kerala - The Economic Times

அரசியல் பகையால் நடந்த இக்கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலச்சேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கில் சுதாகரன் , ஜெயேஷ், ரஞ்சித், அஜீந்தரன், அனில் குமார், ராஜேஷ்  உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset