நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மிதக்கும் புனித மக்கா: தத்தளிக்கும் சவூதி அரேபியா

ரியாத்:

சவூதி அரேபியாவில் திடீரென்று கனமழை பெய்துள்ளது. 

இதனால் அந்த நாட்டின் முக்கிய நகரங்களான மக்கா, மதீனா, ஜெட்டா உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 

பாலைவன தேசமாக சவூதி அரேபியா உள்ளது. இங்கு காடுகள், புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள் இருக்கின்றன. 

இருப்பினும் நாட்டின் 95 சதவீதம் நிலம் என்பது பாலைவனமாகத் தான் இருக்கிறது.

இதனால் சவூதி அரேபியாவில் மழை என்பது அதிகம் பெய்யாது. இங்கு வெயில் தான் வெளுத்து வாங்கும்.  

குறிப்பாக கோடைக்காலங்களில் வெயில் கடுமையாக இருக்கும். 43 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் என்பது நீடிக்கும்.

இந்நிலையில் சவூதி அரேபியாவின் பல இடங்களில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

சவூதி அரேபியாவில் முக்கிய நகரங்களாக உள்ள மக்கா, மதீனா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. 

இந்த மழையின் காரணமாக அங்குள்ள பல சாலைகள், சதுக்கங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 

சில இடங்களில் அளவுக்கு அதிகமாக பெய்த மழை வெள்ளத்தால் சாலைகள், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset