செய்திகள் தமிழ் தொடர்புகள்
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர்
சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது பிடிக்காமல் அவர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் அவர் சிறிது நேரத்திலேயே விருட்டென்று வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியவுடன் தேசிய கீதம் இசைக்க ஆளுநர் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதனைவிடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் அதிருப்தியடைந்து அவையில் இருந்து வெளியேறினார் என்றும் தெரியவந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 4:55 pm
மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவு கண்டனத்திற்குரியது: பேராசிரியர் ஜவாஹிருல்லா
January 7, 2025, 2:32 pm
இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ்: தமிழகத்தில் இருவர் பாதிப்பு
January 6, 2025, 8:48 am
தமிழகத்தில் இன்று முதல் 11-ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
January 3, 2025, 7:48 pm
ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் அடைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு
January 3, 2025, 3:22 pm
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணியொருவரிடமிருந்து ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
January 1, 2025, 7:54 pm