
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அமீர்கானின் பி கே படக்காட்சியைப் போல் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன்; தர மறுத்த கோவில் நிர்வாகம்: தலையிட்ட அமைச்சர் சேகர் பாபு
திருப்போரூர்:
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன் திருப்பி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் கடந்த அக்டோபர் மாதம், அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் வழிபாட்டுக்கு சென்றிருந்தார். இந்த சமயத்தில் உண்டியலில் காணிக்கை செலுத்த முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக கையில் வைத்திருந்த ஐபோனும் உண்டியலினுள் விழுந்தது.
இதனை கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, உண்டியலில் விழும் காணிக்கை அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்று கூறி, மறுத்து விட்டனர். இருப்பினும், இந்து சமய அறநிலையத் துறையிலும் தினேஷ் புகார் அளித்தார்.
உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்ட நாளில்கூட, தினேஷை அழைத்து போனில் உள்ள தரவுகளை வேண்டுமானால் வேறொரு போனில் மாற்றுக் கொள்ளலாம்; ஆனால், செல்போன் தரப்படமாட்டாது என்று திட்டவட்டமாகக் கூறினர்.
உண்டியலில் விழுந்த செல்போனைத் திருப்பித் தருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, சாத்தியக்கூறுகள் இருந்தால் பக்தருக்கு ஐபோன் திரும்பி நிச்சயமாக வழங்கப்படும்” என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி கூறினார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு ``இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கின்ற ஆட்சி; எடுக்கின்ற ஆட்சியல்ல. ஆகையால், பக்தரின் செல்போன் அவரிடமே ஒப்படைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்ட காட்சி நினைவூட்டுகிறது இந்த சம்பவம்.
அமீர் கான் நடித்த பி கே என்ற பிரபல ஹிந்தி திரைப்படத்தில் அனுஷ்கா தனது பணப்பையை வேண்டுமென்றே உண்டியலில் போட்டுவிட்டு அமீர்கானை காப்பாற்றும் காட்சி நினைவுக்கு வருவதாக பக்தர்கள் கூறினார்கள்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:39 pm
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm