நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியா வான்வெளிக்குள் சிங்கப்பூர் போர் விமானங்கள் ஊடுருவவில்லை: சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

சிங்கப்பூர்:

மலேசியா வான்வெளிக்குள் சிங்கப்பூர் போர் விமானங்கள் ஊடுருவவில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

மலேசிய அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஐந்து நாடுகளுக்கான ராணுவப் பயிற்சியை முன்னிட்டு சிங்கப்பூர் விமானங்கள் வானில் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1971ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கு மத்தியில் 'ஐந்து சக்திமிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்' என்ற உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது என்றும், அதன் ஓர் அங்கமாக அண்மையில் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

மேலும், கடந்த 4ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அந்த பயிற்சி நடைபெற்றது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்த பயிற்சியில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 2,600 ராணுவ வீரர்கள் பங்கேற்றதாகவும், 25 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிங்கப்பூர் ராணுவ விமானங்கள் ஜோகூர் வான்பரப்பில் தொடர்ந்து ஊடுருவியதாக ஜோகூர் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசன் குற்றம்சாட்டி இருந்தார்.

இது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset