நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெரும் பரிசுதொகையை மலேசிய பூப்பந்து இணையினர் இலக்கு கொண்டுள்ளனர் 

கோலாலம்பூர் :

உலக பூப்பந்து தொடரில் சிறந்த அடைவுநிலைகளைப் பதிவு செய்த மலேசியாவின் இணையர்களான GOH SZE FEI- NUR IZZUDIN RUMSANI & CHEN TANG JIE - TOH EE WEI அடுத்ததாக மலேசியாவில் நடைபெறும் போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய இலக்கு கொண்டுள்ளனர் 

BWF உலக பூப்பந்து சம்மேளனத்தின் தொடக்க போட்டியாக திகழும் 2025ஆம் ஆண்டுக்கான மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் பரிசு தொகை 1.45 மில்லியன் அமெரிக்க டாலர் உயர்த்தப்பட்டுள்ளது 

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மலேசிய பொதுப் பூப்பந்து போட்டியின் வெற்றியாளர் பரிசுதொகை இவ்வாண்டு 1.25 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1.3 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டது 

இதன் அர்த்தம் என்னவென்றால் இப்போட்டியில் அனைத்து நிலைகளிலிலும் வெற்றிப்பெறும் தரப்புக்கு பரிசுதொகை அதிகளவில் வழங்கப்படும்.  இதன் அடிப்படையில் ஒற்றையர் பிரிவு வெற்றியாளருக்கு 101,500 அமெரிக்க டாலர் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது 

மேலும், இரட்டையர் பிரிவில் வெற்றிப்பெறும் வெற்றியாளர்களுக்கு 107,300 அமெரிக்க டாலர் பரிசுதொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது  

இருப்பினும், சொந்த இடத்தில் விளையாடும் மலேசிய விளையாட்டாளர்கள் தங்களின் வெற்றியைப் பதிவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகும். மலேசிய மாஸ்டர்ஸ் பொது பூப்பந்து போட்டி சூப்பர் 1000 நிலைக்கு உயர்த்தப்பட்டதிலிருந்து பூப்பந்து வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற சிரமப்பட்டனர். 

ஆனாலும், சமீபத்திய பூப்பந்து அடைவுநிலை மலேசிய ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset