செய்திகள் மலேசியா
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி வங்காளதேச தூதரகத்தில் மகஜர் வழங்கப்படும்: மஇகா இளைஞர் பிரிவு
கோலாலம்பூர்:
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி வங்காளதேச தூதரகத்தில் மகஜர் வழங்கப்படும்.
மஇகா இளைஞர் பிரிவின் தலைமை செயலாளர் புவனேஸ்வரன் முனுசாமி இதனை கூறினார்.
அண்மைய காலமாக வங்காளதேசத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக அங்குள்ள இந்து மக்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலேசியாவில் உள்ள வங்காளதேச தூதரகத்தில் மகஜர் வழங்கப்படவுள்ளது.
வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த மகஜர் வழங்கப்படவுள்ளது.
மஇகா இளைஞர் பிரிவு, இளைஞர் பணிப்படை, அரசு சாரா இயக்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இம்மகஜர் வழங்கப்படவுள்ளது.
வங்காளதேச தூதரகத்தில் மகஜர் வழங்கப்பட்டாலும் இது குறித்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என மலேசிய அரசுக்கும் வலியுறுத்தப்படவுள்ளது.
ஆகவே அனைவரும் திரளாக வந்து மஇகா இளைஞர் பிரிவின் இம்முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என புவனேஸ்வரன் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2024, 5:53 pm
பேரரசரின் ஒப்புதலுக்கு இணங்க மூசா நியமிக்கப்பட்டார் : ஃபஹ்மி ஃபாட்சில்
December 17, 2024, 5:23 pm
மண் ஆய்வுத் துறைக்கு அரசாங்கம் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது: ஜலிஹா
December 17, 2024, 5:14 pm
புதிய பள்ளிகளைக் கட்டுவதற்குப் பாதுகாப்பான பகுதிகளை அரசு ஆராய்கிறது: ஃபட்லினா சிடேக்
December 17, 2024, 5:13 pm
பெண்ணின் கார் டயரை ஓட்டையாக்கிய ஆடவர் கைது
December 17, 2024, 5:11 pm