நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல் சுதந்திரம் தொடர்பான சட்டமசோதா அடுத்தாண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

தகவல் சுதந்திரம் தொடர்பான சட்டமசோதா அடுத்தாண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார் 

பொதுச்சேவை தொடர்பான தகவல் சுதந்திரத்தில் வெளிப்படைத்தன்மை, ஒவ்வொருவரின் உரிமைகளை பாதுகாக்க இந்த சட்டமசோதா அவசியமாகிறது என்று அவர் கருத்துரைத்தார் 

இந்த சட்டமசோதா தொடர்பாக நேற்று நடைபெற்ற தேசிய நிர்வாக சிறப்பு அமைச்சரவை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சட்டமசோதாவை தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் தகவல் சுதந்திரம் தொடர்பான விவரங்கள் ஒருவருக்கு முழுமையாக சென்று சேர்வதை அரசாங்கம் உறுதி கொள்ளும் என்று அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset