நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கேரளம், தமிழகம் மாநில உரிமைகளை காத்து வருகின்றன: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்:

மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதில் கேரளம், தமிழகம் இடையிலான ஒத்துழைப்பு முன்னுதாரணமாக விளங்குகிறது. இது மேலும் பல மாநிலங்களுக்கு விரிவடைய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா வைக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கேரளம், தமிழகம் இடையிலான ஒத்துழைப்பு, கூட்டாட்சி அமைப்பு முறை கோட்பாடுகளில் வேரூன்றியதாகும்.

தற்போதைய காலகட்டத்தில், மாநிலங்களின் உரிமைகளில் குறிப்பாக பொருளாதார சுயாட்சியில் அடிக்கடி தலையீடுகள் நிகழ்கின்றன. எனவே, கேரளம்-தமிழகம் இடையிலான இத்தகைய ஒத்துழைப்பு, மேலும் பல மாநிலங்களுக்கு விரிவடைய வேண்டும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset