நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பூண்டி ஏரி திறக்கப்பட்டது: சென்னை மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 

சென்னை: 

கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளுக்கான நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 12,760 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து உபநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் சென்னை மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset