நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: டிக்கெட் எடுக்க முடியாமல் மக்கள் அவதி

சென்னை: 

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீத்துக்கும் மேற்பட்டோர், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
 
பேருந்து டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, அறைகள் முன்பதிவு உள்பட பல்வேறு கூடுதல் வசதியுடன் இந்த இணையதளம் செயல்படுகிறது.

ஆனாலும், இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

அந்த வகையில், ஐஆர்சிடிசி இணையதளம் நேற்று காலை 10.15 மணி அளவில் திடீரென முடங்கியது. இதுதவிர, இந்த செயலியில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். குறிப்பாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர், கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து, பயணிகள் சிலர் முன்பதிவு மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset