
செய்திகள் மலேசியா
2030 முதல் மலேசியாவில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகும் அபாயம்: கைரி தகவல்
கோலாலம்பூர்:
மலேசியாவில் எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு புற்றுநோய்களால் ஆண்டுதோறும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 66 ஆயிரமாக உயரும் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய புற்றுநோய் பதிவேட்டு அறிக்கையில், நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 11% மற்றும் 12.8% பேர் மட்டுமே ஐந்து ஆண்டு காலம் வரை உயிர்வாழும் விகிதத்தை கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் குறிப்பிட்டுள்ளார்.
"பெரும்பாலானோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது அந்நோயின் மூன்று அல்லது நான்காம் கட்டத்தில்தான் தெரிய வருகிறது. இவ்வாறு நோய் கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை 58.7%இல் இருந்து 63.7%ஆக அதிகரித்துள்ளது. 2012 முதல் 2016ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டுள்ளது," என்று அமைச்சர் கைரி தெரிவித்துள்ளார்.
மலேசியர்கள் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், மலேசியர்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் இது இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 9:03 am
பாரம்பரிய யோகாசன போட்டி 2025 ஜொகூரில் முதல் முறையாக நடைபெறவுள்ளது
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm